முகப்பு /செய்தி /இந்தியா / கணவரின் தங்கையை காதலித்து கரம் பிடித்த மனைவி... குடும்பத்தார் போலீஸில் புகார்

கணவரின் தங்கையை காதலித்து கரம் பிடித்த மனைவி... குடும்பத்தார் போலீஸில் புகார்

கணவரின் தங்கையைக் காதலித்து கரம் பிடித்த மனைவி

கணவரின் தங்கையைக் காதலித்து கரம் பிடித்த மனைவி

கணவரின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் 2 குழந்தைகளுக்குத் தாயான பெண்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தில் 32 வயதான பெண் திருமணமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது கணவரின் தங்கையைக் காதலிப்பதாகக் கூறி அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் அவருக்குக் கணவருடன் 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

32 வயதான சுக்லா தேவி என்ற பெண் பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத் தாஸ் என்ற நபருடன் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் இவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவரின் 18 வயது தங்கை சோனி தேவியைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். கணவரின் தங்கையுடன் வாழ்வதற்காகக் கணவரை விட்டு தங்கையைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, நாங்கள் காதலிப்பதால் ஒன்றாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின்பு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுக்லா தேவியின் கணவரும், தனது மனைவிக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

சுக்லா தேவி தனது பெயரை சூரஜ் குமார் என்று மாற்றிக்கொண்டு உள்ளதாகவும் ஆண்கள் மாதிரி ஆடையை அணிந்து முடியை வெட்டிக் கொண்டுள்ளார். மேலும் ஆணாக மாறுவதற்கான வழிமுறைகளை ஆன்லைனில் தேடியுள்ளார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை குறித்த பயம் ஏற்பட்டதால் அதனைச் செய்வதைக் கைவிட்டு விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு..? காங்கிரஸ் மாநாட்டில் சூசகப் பேச்சு...!

இந்த நிலையில், கணவரின் வீட்டார்கள் இருவரையும் பிரித்து 18 வயது தங்கையை அழைத்துச் சென்ற நிலையில் சுக்லா தேவி மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

First published:

Tags: Bihar, Mother