முகப்பு /செய்தி /இந்தியா / 10மாத குழந்தையை கரையில் வைத்து நீரில் மூழ்கியவரை காப்பாற்றிய பெண் - ரியல் சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

10மாத குழந்தையை கரையில் வைத்து நீரில் மூழ்கியவரை காப்பாற்றிய பெண் - ரியல் சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

ரபீனா கஞ்சர்

ரபீனா கஞ்சர்

எதிர்பக்கம் இருந்த நண்பர்கள் கால்வாயை நீந்தி கடக்க வேண்டாம் என எச்சரித்த போதும் அதை பொருட்படுத்தாமல் இளைஞர் நீரில் குதித்துள்ளார்.

  • Last Updated :
  • Bhopal, India

கால்வாயில் மூழ்கிய இளைஞரை பெண் ஒருவர் தைரியத்துடன் மீட்டு காப்பாற்றிய சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கதியகாலா கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ராஜூ அஹிர்வார்.இ வரும் இவரது நண்பர் ஜிதேந்திரா அஹிர்வாரும் அருகேயுள்ள கஜூரியா என்ற கிராமத்தில் விளை நிலங்களுக்கு பூச்சி மருந்து அடிக்க சென்றனர்.

அப்போது அங்கு கனமழை பொழிந்த நிலையில், தங்கள் கிராமத்தில் இருந்து வயல் உள்ள கிராமத்திற்கு செல்ல கால்வாயை தாண்டி பயணிக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது மழை பொழிந்திருந்ததால் கால்வாயில் நீரோட்டமானது வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது.

எதிர்பக்கம் இருந்த நண்பர்கள் இருவரையும் கால்வாயை நீந்தி கடக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அதையும் மீறி ராஜூ மற்றும் ஜிதேந்தர் நீரில் குதித்து கரையை கடக்க முடிவெடுத்துள்ளார். இதை எதிரே நின்ற அதே கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்மணி ரபீனா கஞ்சர் கவனித்துள்ளார். இவர் தனது 10 மாத குழந்தையுடன் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வந்துள்ளார்.

ராஜூவும் ஜிதேந்தரும் கால்வாயில் குதித்த நிலையில், சிறிது நேரத்திலேயே நீரோட்டத்தில் சமநிலை இழந்து அவர்கள் மூழ்கத் தொடங்கியுள்ளனர். ராஜூ காப்பாறறும் படி கூக்குரலிட்ட நிலையில், கரையில் இருந்த பெண்மணி ரபீனா தனது 10 மாத குழந்தையை கரையில் வைத்துவிட்டு நீரில் குதித்துள்ளார். மூழ்கிக்கொண்டிருந்த ராஜூவை அவர் பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளார். ஆனால், ஜிதேந்திராவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதையும் படிங்க: திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காததால் விரக்தி.. கேஸ் போட்ட பக்தர்.. 50 லட்சம் இழப்பீடு வழங்க தேவஸ்தானத்துக்கு உத்தரவு..

top videos

    10 மாத குழந்தையை வைத்திருக்கும் பெண் இத்தனை அசாத்திய துணிச்சலோடு நீரில் குதித்து மூழ்கிய நபரை காப்பாற்றிய சம்பவம் அங்கு பலரையும் நெகிழ வைத்துள்ளது. ரபீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அப்பகுதி காவல்துறை அவருக்கு பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

    First published:

    Tags: Bhopal, Madhya pradesh, Youth drown in water