ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 வயது குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாய்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரம்..

3 வயது குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாய்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரம்..

கைது செய்யப்பட்ட சுனிதா மற்றும் சன்னி

கைது செய்யப்பட்ட சுனிதா மற்றும் சன்னி

3 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதி அருகே உள்ள ரயில்வே டிராக்கில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் அம்பலமானது. உயிரிழந்த குழந்தையின் தாயார் சுனிதா தான் இந்த கொடூரமான கொலையை செய்துள்ளார். சுனிதாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவருக்கும் சன்னி மால்டா என்ற நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சுனிதா கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து சன்னியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் தான் தனது குழந்தைகளை கொலை செய்ய சுனிதா காதலனுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி, தன்னுடைய 3 வயது குழந்தை கிரணை வீட்டில் வைத்து கழுத்தை நெறித்து சுனிதாவும் சன்னியும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அப்புறப்படுத்தும் நோக்கில், குழந்தையின் சடலத்தை துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு ஸ்ரீகங்காநகர் ரயில் நிலையத்திற்கு வந்து டெல்லி நோக்கி செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர்.

சிறிது தூரம் ரயில் தாண்டியதும் அப்பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண் என்ற கால்வாய் வந்துள்ளது. அதில் குழந்தையை தூக்கி வீசிவிடலாம் என்று திட்டமிட்டு வீசும் போது, சடலம் தவறி ரயில்வே பாதையிலேயே விழுந்து விட்டது.இதனால் ஜோடி இருவரும் கையும் களவுமாக காவல்துறையில் சிக்கிக்கொண்டனர். காவல்துறை விசாரணையில் சுனிதா மற்றும் சன்னி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Child murdered, Crime News, Extramarital affair, Rajasthan