ஆந்திராவில் கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த 17 வயது மகனை கொலை செய்த தாய்!

மாதிரி படம்

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த நாகரம்பலேம் போலீசார் , அந்த வீட்டில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஐபிசியின் 302ன் கீழ் சோம்லதா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திராவில் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த மகனை, அவரது தாய் கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் 43 வயதான பெண் ஒருவர் புகைபிடிக்கும் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்த தனது 17 வயது மகனை  கொலை செய்துள்ளார். வலெப்பு சித்தார்த்தா என்ற சிறுவன் தான் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, குண்டூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்த சோம்லதா தனது மகனுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது கணவர் இறந்த பிறகு, சம்லதாவின் வருமானம் மட்டுமே அவரது குடும்பத்தை நடத்த உதவியாக இருந்துள்ளது. 

இந்த சூழலில் பள்ளி செல்லும் சித்தார்த்தா, கஞ்சாவிற்கு அடிமையாகி அவர் அம்மாவிடம் அவ்வப்போது பணம் கேட்டு துன்புறுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, சோம்லதாவுக்கும், அவரது மகனுக்கும் இடையே சண்டை நடந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த சண்டையை தொடந்து சோம்லதா அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் சித்தார்த்தை உள்ளே இறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

Also read... வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுகிறது - நீதிமன்றம் அதிருப்தி!

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த நாகரம்பலேம் போலீசார் , அந்த வீட்டில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஐபிசியின் 302ன் கீழ் சோம்லதா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சோம்லதாவை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். போதைப்பொருள் அடிமையால் ஆண்டுதோறும் எண்ணற்ற கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தில், கஞ்சா போதைக்கு அடிமையான நயீம் பவரியா தனது தாய் ரூ .50 கொடுக்க மறுத்ததால் கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் ஃபக்ராபாத்தில் நிகழ்ந்தது, மேலும் கொலை செய்த நயீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.. 

நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பத்து மருத்துவ நிறுவனங்கள் இணைந்து போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான 15 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நடத்திய தேசிய ஆய்வில் ஆல்கஹால், ஓபியாய்டுகள், கஞ்சா மற்றும் பிற போதை பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் சதவிகிதம் அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், கஞ்சா பயன்பாடு அதிகமாக இருந்தபோதிலும், அதிகம் பயன்படுத்தப்படும் போதை பொருள் ஆல்கஹால் தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: