நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்; மகனை கட்டி அணைத்த நிலையில் மீட்பு -கேரளாவில் துயரம்

மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.

news18
Updated: August 12, 2019, 7:17 PM IST
நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்; மகனை கட்டி அணைத்த நிலையில் மீட்பு -கேரளாவில் துயரம்
கேரள வெள்ளம்
news18
Updated: August 12, 2019, 7:17 PM IST
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண், தனது ஒன்றரை வயது மகனின் உடலை தோளில் அணைத்தபடியே இருந்தது மீட்புப் பணியில் ஈடுபட்டோரை கண்கலங்கவைத்தது.

கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மலப்புரம் அருகே உள்ள கொட்டகுன்னு அருகே உள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்த தனது காதல் மனைவி கீத்து, தனது ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் சரோஜினி ஆகியோருடன் வசித்துவந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவ் உடன் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்துள்ளார். அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, ஒன்றரை வயது சிறுவன் துருவ் மற்றும் சரோஜினி ஆகிய மூவரும் மண்ணுக்குள் புதைந்தனர். சரத் மட்டும் தப்பித்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகிவிட்டது. இன்றுதான் கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...