துணிச்சலாக போராடி குழந்தையை மீட்ட தாய் - பெரியப்பாவே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது அம்பலம்

டெல்லியில் குழந்தையை கடத்த முயன்ற கடத்தல்காரர்களிடம் இருந்து தாய் ஒருவர் துணிச்சலாக போராடி, தனது குழந்தையை மீட்டுள்ளார். விசாரணையில் குழந்தையின் சொந்த பெரியப்பாவே கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

துணிச்சலாக போராடி குழந்தையை மீட்ட தாய் - பெரியப்பாவே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது அம்பலம்
கடத்த முயன்ற காட்சிகள்
  • News18
  • Last Updated: July 24, 2020, 7:47 AM IST
  • Share this:
டெல்லி ஷாஹர்பூரில் கடந்த செவ்வாய்கிழமை அங்குள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது உடனே தண்ணீர் தாய் உள்ளே சென்றபோது, வீட்டின் வெளியே வெளியாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது பெண் குழந்தையை இருவரும் இருசக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்தனர்.

தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியே வந்த குழந்தையின் தாய், இந்த காட்சியை கண்டதும் உடனடியாக துணிச்சலாக செயல்பட்டார். அவர்களிடம் போராடி சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றியதோடு, அவர்கள் தப்பிவிடக்கூடாது என இருசக்கர வாகனத்தையும் இழுத்து தடுக்க முயன்றார்.

இதனால் ஒருவன் வாகனத்தில் இருங்கி நடந்தே தப்பியோட, மற்றொருவன் நீண்ட நேரம் போராடி அந்த வீர பெண்மனியிடம் இருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினார்.


இருவரையும் துரத்தியபடி அருகில் வசிப்பவர் ஓட, மற்றொரு இளைஞரோ சமயோஜிதமாக செயல்பட்டு இருசக்கர வாகனத்தை சாய்த்து தடுத்து நிறுத்தினார். இருப்பினும், கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடினர். இந்தகாட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கடத்தல்காரர்கள் இருவரும் விட்டுச்சென்ற பையில் இருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி, 4 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார்,இருசக்கர வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீரஜ் என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில், குழந்தையின் பெரியப்பாதான் தீரஜ் என்பது தெரியவந்துள்ளது. துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.
படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

இதையடுத்து தீரஜ், அவருக்கு உதவிய நண்பர் ஒருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகாமல், துணிச்சலாக சண்டையிட்டு குழந்தையை மீட்ட தாய்க்கும், எது நடந்தாலும் நமக்கென்ன என்ற பலருக்கு மத்தியிலும் இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்ற அக்கம் பக்கத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading