Home /News /national /

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் நண்பரின் ஆணுறுப்பை துண்டித்த தாய்

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் நண்பரின் ஆணுறுப்பை துண்டித்த தாய்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சம்பந்தப்பட்ட ஆண் நண்பர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பு வெட்டப்பட்டதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மகளை காப்பாற்றுவதற்காக நண்பரின் ஆண் உறுப்பை தாய் துண்டித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. இதன் பின்னணி குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் உள்ள மாஹேகஞ்ச் பகுதியில் 36 வயதுடைய பெண், தனது மகள் மற்றும் 32 வயதுடைய ஆண் நண்பருடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இதற்கு குடி போதையில் கணவர் தகராறு செய்ததே காரணம் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.  சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது ஆண் நண்பரும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில், லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

     பேச மறுத்த +2 மாணவியை தீவைத்து எரித்த இளைஞர்.. ஜார்கண்டில் பரபரப்பு

    இந்நிலையில் கடந்த 18ம் தேதி வேலை காரணமாக அந்தப் பெண் வெளியே சென்றுள்ளார். வீட்டில் அவரது 14 வயது மகள் இருந்தபோது, ஆண் நண்பர் மகளிடம் தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார்.

    அப்போது திடீரென வீட்டிற்கு திரும்பிய பெண், நடந்த சம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கும் ஆண் நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து விறுவிறுவென சமையலறைக்கு ஓடிச் சென்ற அந்தப் பெண், அங்கிருந்த கத்தியை எடுத்து ஆண் நண்பரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். ஆணுறுப்பு வெட்டப்பட்டதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயர் சிகிச்சைக்காக தலைநகர் லக்னோவுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெண்ணை கூலிப்படை வைத்து கொன்ற காதலன்.. கள்ளக் காதலால் விபரீதம்

    இந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆண் நண்பர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறுகையில், ‘நான் வீட்டிற்கு திரும்பியபோது, எனது மகளிடம் அவர் தவறாக நடக்க முற்பட்டார். இதன்பின்னர் அவருக்கும் எனக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நான் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து அவரது ஆணுறுப்பை வெட்டினேன்.  அவருக்கு நல்ல பாடம் கற்பிப்பதற்காக இந்த காரியத்தை செய்தேன். இதனை செய்ததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Crime News, Uttar pradesh

    அடுத்த செய்தி