முகப்பு /செய்தி /இந்தியா / சிறுமியை வீட்டிற்கு அழைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை... தாய், மகன் கைது

சிறுமியை வீட்டிற்கு அழைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை... தாய், மகன் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குற்ற சம்பவம் தொடர்பாக கைதான அனுஸ்ரீ தனது வீட்டிற்கு வந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • West Bengal, India

கொல்கத்தாவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட புகாரில் இளைஞர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ கோத்தாரி. இவருக்கு குணால் கோத்தாரி என்ற மகன் உள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி.

தாயார் அனுஸ்ரீ பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அங்கு 16 வயது சிறுமி ஒருவர் அழகு கலை பயிற்சி பயின்று வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் துர்கா பூஜை பண்டிகையின் போது அந்த சிறுமியை அனுஸ்ரீ தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமிக்கு அனுஸ்ரீ குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு சிறுமி மயக்கமடைந்த நிலையில், வீட்டில் இருந்த அனுஸ்ரீயின் மகன் குணால் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அந்த சிறுமிக்கு சுயநினைவு திரும்பியபோது தான் தனக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்துள்ளது. இதை வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்ற பயத்தில் சிறுமி பல நாள்களாக விஷயத்தை மூடி மறைத்துள்ளார்.  பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினரிடம் உண்மையை கூறினார்.

இதையும் படிங்க: பெரியம்மாவை கொன்று பல துண்டுகளாக வெட்டி வீசிய இளைஞர்... மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

அதன் அடிப்படையில், கொல்கத்தா காவல்துறை தாய் அனுஸ்ரீ மற்றும் மகன் குணாலை கைது செய்துள்ளது. இருவர் மீது போக்சோ குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மகனுக்கு அவரது தாயே உடந்தையாக இருந்து குற்றத்தில் கூட்டுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kolkata, Minor girl, Rape, Rape case