உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள்: விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்க மறுப்பு

உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள்: விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்க மறுப்பு

டெல்லி விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

 • Share this:
  உச்ச நீதிமன்றம் அமைத்த விவசாயச் சட்டங்கள் மீதான கமிட்டி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களையும் அரசையும் ஆதரிப்வர்கள் ஆகவே நாங்கள் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

  வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

  வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது

  பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது.

  இந்தக் குழுவில் உள்ளவர்கள் ஏற்கெனவே விவசாயச் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்றும் போராட்டம் தவறாக வழிநடத்தப்படுகிறது என்றும் கூறியவர்கள் என்பதால் தங்களுக்கு இந்தக் குழு மீது நம்பிக்கை இல்லை என்று விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

  விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜ்வால் கூறுகையில் “ உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கக் கோரி விவசாயிகள் கேட்கவே இல்லை. இந்த திட்டத்துக்குப்பின்னால் மத்திய அரசு இருக்கிறது.

  உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள சார்பற்றவர்கள் அல்ல. வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானது என எழுதியவர்கள். எங்கள் போராட்டம் தொடரும். எந்த குழுவின் கொள்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள். எங்கள் போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அ ரசு முயல்கிறது. 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த சட்டங்களை ரத்து செய்யட்டும். ” எனத் தெரிவி்த்தார்

  மற்றொரு விவசாயி சங்கத் தலைவர் தர்ஷன் சிங் கூறுகையில் “ நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராகமாட்டோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காணட்டும். எந்தக் குழுவும் தேவையில்லை. இந்த குழுவின் நோக்கமே போராட்டத்தைத் தணிக்கத்தான்” எனத் தெரிவித்தார்.

  குழுவில் உள்ள மூவர் வெளிப்படையாகவே விவசாயச்சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று கூறியவர்கள். 4வது உறுப்பினரான புபீந்தர் சிங் மான், சட்டச் சீர்த்திருத்தங்கள் தேவை என்கிறார், குறைந்த பட்ச ஆதாரவிலை அகற்றப்படமாட்டாது என்று அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாக இவர் கூறுகிறார், ஆனால் அது சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்கிறார்கள் விவசாய அமைப்பினர்.
  Published by:Muthukumar
  First published: