• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆன்லைன் கல்வியில் 522 மணி நேரங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆன்லைன் கல்வியில் 522 மணி நேரங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

online class

online class

கொரோனா வைரஸ் தொடங்கிய காலத்தில் இருந்து 56 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போன்கள் மூலம் புதிய ஆன்லைன் கல்வி திட்டங்களில் பதிவு செய்துள்ளனர்

  • Share this:
கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்விக்காக இந்தியர்கள் சராசரியாக 522 மணி நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கியதால், இணையப் பயன்பாடு ஜெட் வேகத்தில் எகிறியது. அலுவலக வேலை முதல் கல்வி வரை என அனைத்தும் ஆன்லைனுக்கு மாறியதால், இந்தியர்கள் ஆன்லைனில் இருக்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்தது. வகுப்பறையில் மட்டுமே கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள், பழக்கம் இல்லாத ஆன்லைன் கல்வி முறைக்கு மாறத் தொடங்கினர்

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கொரோனா வைரஸ் தொடங்கிய காலத்தில் இருந்து 56 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போன்கள் மூலம் புதிய ஆன்லைன் கல்வி திட்டங்களில் பதிவு செய்துள்ளனர். 58 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போன்கள் வழியாகவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். குருகிராமில் உள்ள சைபர் மீடியா ரிசேர்ச் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

Also Read: ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!

பெரும்பாலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக இந்தியர்கள் சராசரியாக ரூ.8,500 செலவழித்திருப்பதாகவும், இன்போடெய்ன்மென்டுக்காக 28 விழுக்காடு ஸ்மார்ட்போன் யூசர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் செலவழித்திருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. இந்த ஆய்வை நடத்திய சைபர் மீடியா ரிசேர்ச் நிறுவனத்தின் தலைமை தொழில்துறை நுண்ணறிவு குழுவைச் சேர்ந்த பிரபு ராம் பேசும்போது, ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் இன்போடெயின்மென்டுகளாக நகர்புறம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவு ஸ்மார்ட்போன்களை சார்ந்திருந்துள்ளனர் எனக் கூறினார்.

Also Read:   குட்கா எச்சில் கறைகளை சுத்தம் செய்ய பலநூறு கோடிகளை செலவிடும் ரயில்வேதுறை!

7 ஆயிரம் ரூபாயில் கிடைக்ககூடிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ள அவர், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய போன்களையே அதிகம் சந்தையில் இறக்குமதி செய்த தாகவும் பிரபு ராம் குறிப்பிட்டார். அதில், ஒரு போனை பயன்படுத்தியவர்கள், தங்களின் நம்பிக்கைக்குரியவர்களுக்கு, விரும்புபவர்களுக்கு பரிந்துரைத்தது 79 விழுக்காட்டினர் என கூறிய அவர், வணிகர்கள் 77 விழுக்காட்டினர் தாங்கள் பயன்படுத்தும் போனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Also Read:    அக்ஸர் பட்டேல் நீக்கம்.. சென்னை வீரர் சேர்ப்பு.. உலக கோப்பை இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்த பிசிசிஐ!

நகரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெங்களுரூ, சண்டிகர் மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஐடெல் பிராண்டை அதிகம் நம்புகின்றனர். டெல்லி, கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் ரியல்மீ- பிராண்டை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். லக்னோ, புவனேஸ்வர் மற்றும் இந்தூரில் சியோமி பிராண்ட் அதிக விருப்பங்களைப் பெற்றுள்ளது.

தரத்தின் அடிப்படையில் சாம்சங் மக்களிடம் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும் சைபர் மீடியா ரிசேர்ச் (CyberMediaResearch) நிறுவனம் கூறியுள்ளது. மலிவு விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்பும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் மூன்று விஷயங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. மலிவு விலை, தரம் மற்றும் உடனடியாக கிடைப்பது ஆகிவை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: