இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள மசூதி, மதநல்லிணக்க அடையாளச் சின்னமாக ஒளிவீசி வருகிறது.
மத துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையிலான வெறுப்பு பேச்சும், தாக்குதலும் நாட்டின் மூலை முடுக்குகளின் சில பகுதிகளில் நடந்து வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவது மதநல்லிணக்க அடையாளமாக விளங்குவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் சான்றாகவும் திகழ்ந்து வருகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 25 கிமீ தொலைவில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பராசத் எனும் ஊரில் அமைந்துள்ளது 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அமனாதி மசூதி (Amanati Masjid ). இந்த மசூதி அமைந்துள்ள நிலமானது இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பார்த்தசாரதி பாசு என்ற அந்த நபரும் அவருடைய குடும்பத்தினரும் தான் இன்றளவும், இந்த மசூதியை பராமரித்து வருகின்றனர்.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
1964ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இந்துக்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அருமையில் உள்ள பகுதியான இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திற்கு தப்பி வந்து பலரும் தஞ்சம் அடைந்தனர். இந்த கலவரத்தின் போது வங்கதேசத்தின் குல்னா எனும் பகுதியில் இருந்து பார்த்தசாரதியின் தாத்தா தனது குடும்பத்தினருடன் பராசத் (மேற்குவங்கம்) பகுதியில் குடியமர்ந்தார். பின்னர் இஸ்லாமியர் ஒருவரிடம், கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் தனது நிலத்துக்கு மாற்றாக பராசத்தில் இருந்த இந்த நிலத்தை மாற்றிக் கொண்டார்.
Also read: இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!
இந்த நிலத்தில் மசூதி இருந்ததை பார்த்த பார்த்தசாரதியின் தாத்தா வியப்படைந்துள்ளார். ஏனென்றால் இந்த நிலத்தில் ஒரு கட்டிடம் உள்ளது என்பது நிலப்பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. அங்கிருந்த சக இந்துக்கள் இந்த மசூதியை இடித்துவிட யோசனை தெரிவித்தனர். அதனை பார்த்தசாரதியின் தாத்தா நிராகரித்ததுடன், அந்த மசூதியை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியதுடன் மசூதியை புதுப்பித்து அதனை ஆசையுடன் பராமரித்தும் வந்துள்ளார்.
Also read: லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்
அந்த சுற்றுச்சுவரில் ‘இறைவனின் பாதத்தை தொடுங்கள்’ என்ற வாசகத்தை பொறித்துள்ளனர். இன்று இந்த மசூதியில் நூற்றுக்கும் மேலான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகின்றனர். இந்த மசூதி மீது என் மகன் அன்பாக இருக்கிறான், இந்த மசூதி எங்கள் குடும்பத்தின் பெருமை. இங்கு வழிபட நாங்களும் நேரம் ஒதுக்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் அன்று இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து ஒன்றாக இங்கு உணவு அருந்துகிறோம் என்றார் பார்த்தசாரதி.
18 நூற்றாண்டில் வாழ்ந்த சிட்டகாங்கைச் சேர்ந்த துறவியான ஷா அமானத் என்பவரின் பெயர் தான் இந்த மசூதிக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரை இந்துக்கள், இஸ்லாமியர்கள், பசூஸ்கள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu, Hindus and muslims, Mosque, Muslim