கேரளாவைச் சேர்ந்த 8 பேர் நேபாளத்தில் உயிரிழந்தது எப்படி...?

கேரளாவைச் சேர்ந்த 8 பேர் நேபாளத்தில் உயிரிழந்தது எப்படி...?
News18
  • News18
  • Last Updated: January 24, 2020, 12:39 PM IST
  • Share this:
நேபாளத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன. 

கேரளாவைச் சேர்ந்த 15 பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விடுதி ஒன்றில் 7 பேர் ஒரு அறையிலும், 8 பேர் மற்றொரு அறையிலும் தங்கினர். நேபாளத்தில் கடுங்குளிரில் இருந்து காத்து கொள்வதற்காக அறைகளில் எரிவாயு ஹீட்டர்களை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு குளிருக்காக அறையில் இருந்த ஹீட்டர், 8 பேர் இருந்த அறையில் இயக்கப்பட்டுள்ளது.

அப்போது ஹீட்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் உடல்களை கேரளாவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து 8 பேரின் உடல்களும் காத்மாண்டுவில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேரளா எடுத்து செல்லப்படுகிறது.


8 பேரில் 5 பேரின் உடல்கள் திருவனந்தபுரத்திலும், 3 பேரின் உடல்கள் கோழிக்கோட்டிலும் உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட உள்ளன. இந்த விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை மட்டும் மற்றொரு அறையில் தங்கியிருந்ததால் உயிர்பிழைத்து தனது மொத்த குடும்பத்தையும் இழந்து விட்டது.

 
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்