இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India - AAI) தனது 14 விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட்களை (Ambulifts) பொருத்தியுள்ளது. குறிப்பிட்ட விமான நிலையங்களில் ஏரோபிரிட்ஜ் வசதிகள் (aerobridge facilities) இல்லாத காரணத்தினால் அங்கே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆம்புலிஃப்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கடந்த புதன்கிழமை வெளியான ஏஏஐ-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது விமான பயணிகளின் 'மொபைலிட்டி' ஐ எளிதாக்ககும் - அதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மிகவும் எளிதாகவும் நகர்வதை உறுதி செய்யும் நோக்கத்தினை கொண்டு உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் இந்த நடவடிக்கை மாற்று திறனாளிகளுக்கு மிகவும் உதவியாய் இருக்க வேண்டும் என்கிற திட்டத்துடனும் ஒற்றுப்போகிறது. ஏனெனில் இது சுகம்யா பாரத் அபியான் (Sugamya Bharat Abhiyan) திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது அக்ஸசேபிள் இந்தியா கேம்பைன் (Accessible India Campaign) என்றும் அழைக்கப்படுகிறது.
அறியாதோர்களுக்கு, சுகம்யா பாரத் அபியான் என்பது நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளி சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவின் 44, 45, 46 இன் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்தில் பாகுபாடு இல்லாத சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது.
ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாத, கோட் சி (Code C) மற்றும் பிற மேம்பட்ட நிலை விமானங்களின் திட்டமிடப்பட்ட விமான செயல்பாடுகளைக் கொண்ட விமான நிலையங்களுக்காக இந்திய விமான நிலைய ஆணையமானது 20 ஆம்புலிஃப்ட்களை வாங்கியது. குறிப்பிடத்தக்க வண்ணம் இந்த ஆம்புலிஃப்ட்கள் அனைத்தும் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆம்புலிஃப்ட்ஸ் வசதியானது தற்போது டெஹ்ராடூன், கோரக்பூர், பாட்னா, பாக்டோக்ரா, தர்பங்கா, இம்பால், விஜயவாடா, போர்ட் பிளேர், ஜோத்பூர், பெல்காம், சில்சார், ஜார்சுகுடா, ராஜ்கோட், ஹூப்ளி ஆகிய 14 விமான நிலையங்களில் செயல்பட்டு வருகிறது, மீதமுள்ள 6 ஆம்புலிஃப்ட்கள் திமாபூர், ஜோர்ஹாட், லே, ஜாம்நகர், புஜ் மற்றும் கான்பூர் விமான நிலையங்களில் செயல்பட வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட 6 விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட்ஸ் செயல்பாடுகளானது இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகதத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : யாசகம் கேட்ட முதியவரை குளிப்பாட்டி உணவு வழங்கிய காவல் அதிகாரி..! நெகிழ்ச்சி சம்பவம்..
நாம் இங்கே பேசிக்கொண்டு இருக்கும் ஆம்புலிஃப்ட்களால் 6 சக்கர நாற்காலிகள் மற்றும் 2 ஸ்ட்ரெச்சர்களை ஒரே நேரத்தில் ஒரு உதவியாளருடன் இயக்கும் திறன் கொண்டது மற்றும் இது ஹீட்டிங் வென்டிலேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் (Heating Ventilation & Air-Conditioning system) உடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையமானது இந்த ஆம்புலிஃப்ட்டின் ஒரு யூனிட்டை ரூ.63 லட்சம் செலவு செய்து வாங்கியுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட விமான நிலையங்களில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு பெயரளவு டோக்கன் கட்டணத்தில் ஆம்புலிஃப்ட் வசதியை வழங்க உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.