ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கம் - அமலாக்கத்துறை

நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கம் - அமலாக்கத்துறை

நிரவ் மோடி

நிரவ் மோடி

நிரவ் மோடி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் நான்கு முறை ஜாமின் கோரப்பட்டு நான்கு முறையும் மறுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக்கணக்கை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த வழக்கில் இந்தியாவில் இருந்து தப்பியோடியுள்ளார் நிரவ் மோடி. நிரவ் மோடி மீதான வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் அவரது சுவிஸ் வங்கிக்கணக்கை முடக்கம் செய்ய கோரிக்கை வைத்தது இந்திய அமலாக்கத்துறை.

நிரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கணக்கிலிருந்து 286 கோடி ரூபாய் அவரது சுவிஸ் வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் ஆனது. முதலில் துபாய், ஹாங்காங் எனப் பயணித்த பணம் தற்போது சுவிட்சர்லாந்து வங்கிக்கணக்கில் உள்ளது. நான்கு மாத கோரிக்கைக்குப் பின்னர் தற்போது சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நிரவ் மோடி கைதாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இதுவரையில் நிரவ் மோடி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் நான்கு முறை ஜாமின் கோரப்பட்டு நான்கு முறையும் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஆம்புலன்ஸ்க்கு வழி விடவில்லை என்றால் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Published by:Rahini M
First published:

Tags: Nirav modi