Home /News /national /

தேர்தலில் போட்டியிட மறுக்கும் மக்கள் செல்வாக்கு மிகுந்த திரிணாமுல் காங். எம்.எல்.ஏ - மமதாவுக்கு தொடரும் நெருக்கடி!

தேர்தலில் போட்டியிட மறுக்கும் மக்கள் செல்வாக்கு மிகுந்த திரிணாமுல் காங். எம்.எல்.ஏ - மமதாவுக்கு தொடரும் நெருக்கடி!

கிழக்கு புர்த்வான் மாவட்டத்தில் உள்ள Mongolkot தொகுதியின் எம்.எல்.ஏவான இவர் 2016 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் சகாஹகான் சவுத்ரியை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் சித்திக்குலா சவுத்ரியை, முதல்வர் மமதா பானர்ஜி அமைச்சராக்கினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வரிசையாக தலைவர்கள் விலகி வருவது ஒரு புறம் இருக்க செல்வாக்கு மிகுந்த எம்.எல்.ஏ ஒருவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மறுத்துள்ளது முதல்வர் மமதா பானர்ஜிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிரு மாதங்களில் தமிழகம், கேரளா, அசாம், புதுவை, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்கள், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளன. தேர்தல் நடைபெறும் தேதி இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே உற்றுநோக்கும் மாநிலமாக உருவெடுத்திருப்பது மேற்குவங்கமாக தான் இருக்கிறது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்து வந்த மேற்குவங்கத்தில் வெற்றி வாகை சூடி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மமதா பானர்ஜிக்கு தற்போது போதாத காலமாக மாறிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது மமதா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சியில் இருந்து விலகியதற்கு மமதா பானர்ஜி மற்றும் மாவட்ட தலைமையின் அணுகுமுறையை குற்றம் சாட்டி பேசினர்.

இதனிடையே மமதா பானர்ஜியை ஆட்சியில் அமர்த்தியதில் முக்கியப் பங்கு வகித்த நந்திகிராம் நில எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் முக்கியமானவராக திகழும் எம்.எல்.ஏ சித்திக்குலா சவுத்ரி, எதிர்வரும் தேர்தலில் தனது தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கிழக்கு புர்த்வான் மாவட்டத்தில் உள்ள Mongolkot தொகுதியின் எம்.எல்.ஏவான இவர் 2016 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் சகாஹகான் சவுத்ரியை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் சித்திக்குலா சவுத்ரியை, முதல்வர் மமதா பானர்ஜி அமைச்சராக்கினார்.

அப்பகுதியில் நல்ல மக்கள் செல்வாக்கு பெற்றவரான சித்திக்குலா சவுத்ரி, தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதை முதல்வர் மமாதாவிடம் தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள மோசமான தலைமை குறித்து அனைத்தையும் எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தெரிவித்துள்ளேன். மாவட்ட தலைமையின் ஒழுங்கற்ற செயல்பாடு, அலட்சிய நடத்தை, மரியாதை இல்லாதது போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான தலைமை காரணமாக மாவட்டம் வளர்ச்சியின் பாதையில் பின்தங்கியிருந்தால் வாய் மூடி மவுனியாக இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

செல்வாக்கு பெற்றவரான சித்திக்குலா சவுத்ரி, Mongolkot தொகுதியில் போட்டியிடாமல் இருந்தால் அது திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமைச்சர் சுவேந்து அதிகாரி, அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான லக்‌ஷ்மி ரத்தன் சுக்லா, முன்னாள் எம்.பி சுனில் மொந்தல், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வைஷாலி டால்மியா, அரிந்தம் பட்டாச்சார்யா ஆகியோர் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
Published by:Arun
First published:

Tags: 5 State Election, Mamata banerjee, West Bengal Election

அடுத்த செய்தி