நாட்டில் 8.3 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி

நெட்வொர்க் 18 - பெடரல் வங்கி இணைந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி பிரச்சார இயக்கம் இன்று தொடங்கியது

  • Share this:
நெட்வொர்க் 18 மற்றும் பெடரல் வங்கியின் கூட்டு முயற்சியான ‘Sanjeevani – A Shot of Life’ தொடக்க விழாவின் போது பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் நாட்டில் 8.3 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

சஞ்சீவனி பிரச்சார இயக்கத்தை நெட்வொர்க் 18 மற்றும் அப்போலோ 24/7 மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்துகிறது. இது பெடரல் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு (corporate social responsibility) நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். சஞ்சீவனி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2 வது கொரோனா அலையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 5 கிராமங்களை தத்தெடுத்து, தங்கள் கிராமங்களில் இலவச தடுப்பூசிகளை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் Apollo 24/7 மருத்துவமனையின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இப்பணியில் அப்போலோவின் அனுபவமிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் மீதான மக்களின் அச்சத்தை போக்குவதுடன் மக்களை தடுப்பூசி போட முன்வர வைக்கவும் வழிவகை கிடைக்கும்.

சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் சோனு சூட், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ராணுவ வீரர்கள் சல்யூட் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்வில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “நாட்டில் ஒட்டுமொத்த அளவில் நாங்கள் ஏற்கனவே 8 கோடி 30 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 43 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தடுப்பூசி திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்பவர்களுக்கு தடையற்ற எளிதான வழிமுறை உள்ளது.

நெட்வொர்க் 18, பெடரல் வங்கி இணைந்து நடத்தும் இந்த பிரச்சார இயக்கத்தை கண்டு மகிழ்கிறேன், இதற்கு சஞ்சீவனி என பெயர் சூட்டியுள்ளீர்கள்... நோயாளிகளுடன் களத்தில் செயலாற்றும் கொரோனா முன்கள வீரர்களுக்கு சளைத்தவர்கள் ஊடகத்தினர் கிடையாது என நான் முன்னதாகவே கூறியிருக்கிறேன். தடுப்பூசி திட்டத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றியமைத்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

ராமாயணத்தில் உயிர் காக்கும் சஞ்சீவி மூலிகையை கொண்டுருவந்து லட்சுமணின் உயிரை காப்பதற்காக அனுமான் இமயமலையில் இருந்து பல மைல் தூரத்திற்கு சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கிக் கொண்டுவந்தார். ஆனால் நாங்கள் சஞ்சீவி மூலிகை போன்ற உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசிகளை அரசு, தனியார் மருத்துவமனைகள் என நாட்டின் பல மையங்களில் உங்களுக்கு கிடைக்கச் செய்துள்ளோம் என ஹர்ஷ்வர்தன் கூறினார்.
Published by:Arun
First published: