Pegasus : ‘பெகாசஸ்’ ஒட்டு கேட்பு விவகாரம் - தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்கள்

உச்ச நீதிமன்றம் - பெகாசஸ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

  • Share this:
    பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

    பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், கல்வியாளர்கள், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோர் என, பல்வேறு தரப்பினர் உளவு பார்க்கப்படுகின்றனர்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டு விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மனித உரிமை ஆர்வலர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களையும் பழிவாங்குவதற்கு இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற உளவு மென்பொருளை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்நிலையில், போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ., குழுமம் நிறுவனத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அந்நிறுவனம், “பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம். இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்பு களுக்கு மட்டுமே தருகிறோம்.

    Must Read : ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

    எங்கள் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானவை. ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. இஸ்ரேல் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான செய்தி என்பது, விசாரணையில் தெரியவரும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பகு குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: