42 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

42 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மாதிரி படம்

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதி இல்லை எனக் கூறிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளின் நிலையை உயர்த்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் 42 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர் வசதியும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை வசதியும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யூ.டி.ஐ.எஸ்.இ (UDISE) தரவுகளின் அடிப்படையில் பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், இந்தியா முழுவதும் 10,83,747 அரசுப் பள்ளிகள் இருப்பதாக தெரிவித்தார். அவற்றில் 10,41,327 பள்ளிகளில் முறையான குடிநீர் வசதி இருப்பதாகவும், 10,68,726 பள்ளிகளில் கழிவறை வசதி இருப்பதாகவும் கூறினார். மேலும், அரசுப் பள்ளிகளில் 42 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை எனத் தெரிவித்தார்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதி இல்லை எனக் கூறிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளின் நிலையை உயர்த்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார். குறிப்பாக, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, விரைவாக அந்த வசதிகள் செய்து தரப்படும் என கூறியுள்ளார்.

Also read... பெருமளவு பயிர் இழப்பை ஏற்படுத்தும் விகிதத்தில் உலகம் வெப்பமடைந்து வருகிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மத்திய அரசு சார்பில் அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ரமேஷ் பொக்கிரியால் கூறினார். ஆண், பெண் என தனித்தனியாக கழிவறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். இந்து நாளிதழ் தகவல்படி, தரவுகளில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவிலான அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே அடிப்படை வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 8 விழுக்காடு பள்ளிகளும், மேற்கு வங்கத்தில் 11 விழுக்காடு பள்ளிகள் மட்டுமே இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், மற்ற பள்ளிகளில் இந்த வசதிகள் இல்லை எனக் கூறியுள்ளது. அங்கன்வாடிகளைப் பொறுத்தவரையில் அசாம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 2 முதல் 6 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நகர்புற குடியிருப்பு வாசிகளுக்கும் குடிநீர் பிரச்சனை இருப்பதால், அதனை போக்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிசன் என்ற திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி அறிவித்திருந்தார். அந்த திட்டத்தின்படி நகர்புறங்களில் வசிக்கும் 2.86 கோடி வீடுகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு அதற்காக 2,787,000 கோடிகளை ஒதுக்கியுள்ளது. கழிவுகளை அகற்றுவதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் 500 நகரங்கள் தேர்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: