நாடு முழுவதும் பள்ளி கல்வி குறித்த விரிவான ஆய்வு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2021-22 காலகட்டத்தில் நாட்டில் பள்ளி கல்விதுறையில் ஏற்பட்ட முக்கிய மாறுதல்கள் இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. UDISE+ என்ற பெயரில் வெளியான அறிக்கையின் படி, 2020-21 கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 15,09,000 பள்ளிகள் இருந்த நிலையில், அடுத்த கல்வி ஆண்டான 2021-22இல் இது 14,89,000 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது ஓராண்டில் சுமார் 20,000 பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.
2020-21 என்பது நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவி லாக்டவுன் இருந்த காலமாகும். எனவே, லாக்டவுன் காலத்தில் தான் இந்தியாவில் 20,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள் என ஆய்வு தெரிவிக்கின்றன. அதேபோல், நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் ஓராண்டில் 1.95 சதவீதம் குறைந்துள்ளது.2020-21 காலகட்டத்தில் நாட்டில் 97.87 லட்சம் ஆசிரியர்கள் இருந்த நிலையில், அது 2021-22 காலகட்டத்தில் 95.07 லட்சமாக குறைந்துள்ளது.
நாட்டில் 44.85 சதவீதம் பள்ளிகள் மட்டுமே கம்ப்யூடர் வசதி உள்ளது எனவும், மொத்தம் 34 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே இணைய சேவை வசதி உள்ளது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.27 சதவீத பள்ளிகளில் தான் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என தனிக் கழிப்பறை வசதி உள்ளது.கொரோனா தாக்கம் காரணமாக 2020-21 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 19,00,000 சரிவை கண்டுள்ளது. இதில் நலிந்த குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தொடக்க கல்வியில் இருந்து உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை, பெண்கள், பட்டியல் இன, பழங்குடி மாணவர் சேர்க்கை 2021-22 கல்வி ஆண்டில் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வில் முக்கிய தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Gujarat Election: குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு
ஆய்வின் 2021-22-ம் ஆண்டில் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை இதோ:
மின் இணைப்பு: 89.3%
குடிநீர்: 98.2%
பெண்கள் கழிப்பறை: 97.5%
சிறப்புக் குழந்தைகளுக்கான (CWSN) கழிப்பறை வசதி: 27%
கை கழுவும் வசதி: 93.6%
விளையாட்டு மைதானம்: 77%
சிறப்புக் குழந்தைகளுக்கான சாய்வு கைப்பிடி வசதி: 49.7%
நூலகம்/ வாசிப்பு அறை/ படிக்கும் அறை: 87.3% உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Private schools, School, School education