உத்தரகண்டில் 2,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா - அதில் 90% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றதாக தகவல்!

உத்தரகண்ட் காவல்துறை

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 2,382 காவல்துறையினர் கடமையில் இருந்தபோது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

  • Share this:
கொடிய கொரோனா வைரஸின்  இரண்டாவது அலையின் தாக்கத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 93 சதவீதம் பேர் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாயன்று பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 2,382 காவல்துறையினர் கடமையில் இருந்தபோது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில், 2,204 பேர் கொரோனாவில் இருந்து ஏற்கனவே குணமடைந்துள்ளனர். மேலும் அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தரவுகளின்படி, கொரோனவால் உயிரிழந்த ஐந்து காவல்துறை அதிகாரிகளில் இருவருக்கு இணை நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற மூவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை.

அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, டி.ஐ.ஜி (சட்டம் ஒழுங்கு) மற்றும் உத்தரகண்ட் காவல்துறை தலைமை செய்தித் தொடர்பாளர் நிலேஷ் ஆனந்த் பார்னே ஆகியோர் கூறியதாவது, கொரோனா பாதிப்பு தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன என்று கூறியுள்ளனர். மேலும் பார்னே கூறியதாவது, டோஸ் பெற்ற பிறகு யாரும் கொரோனாவால் பாதிக்கப்படமாட்டார்கள் என எந்த ஒரு தடுப்பூசி உற்பத்தியாளர்களும் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் கொரோனாவால் இறந்த சில போலீசார் ஹரித்வாரில் உள்ள கும்பமேளா நிகழ்வின் போது கடமையில் பணியமர்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அவர்களின் இறப்புக்கும் மதக் கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பார்னே கூறியுள்ளார். கொரோனா பாதித்த காவல்துறை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 751 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில் 64 பேர் உயிரிழந்தனர்.

Also Read:   சீனாவில் ஓராண்டாக ஊருக்குள் சுற்றித்திரியும் 15 யானைகள் - 1 மில்லியன் டாலர் சேதம்!

தொற்றுநோயின் முதல் கட்டத்தில், 1,982 காவல்துறையினர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் இறந்தனர். தரவுகளின் பகுப்பாய்வின்படி, கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை 4,364 காவல்துறையினர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ‘மிஷன் ஹவுஸ்லா’ திட்டத்தின் மூலம் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும், தேவைப்படுபவர்களுக்கு செய்த உதவுவதையும் உத்தரகண்ட் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

Also Read:   பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜகோபாலன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

மேலும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் போலி மருந்து விற்பனை, அதிகப்படியான கட்டணம் வசூலித்தல் மற்றும் மருந்துகளை பதுக்கி வைத்தல் ஆகிய வழக்குகள் தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், முகக்கவசங்களை அணியாததற்காக 1.26 லட்சம் பேர் மீதும், சமூக விலகல் விதிமுறைகளை மீறியதற்காக 2.61 லட்சம் பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 31ம் தேதி வரை விதிமீறல் தொடர்பாக ரூ.6.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: