முகப்பு /செய்தி /இந்தியா / குழந்தை திருமணங்கள்.. ஒரே நாளில் 2,044 பேர் அதிரடி கைது...!

குழந்தை திருமணங்கள்.. ஒரே நாளில் 2,044 பேர் அதிரடி கைது...!

குழந்தை திருமணங்கள்

குழந்தை திருமணங்கள்

அசாம் மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 2,044 பேர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Assam, India

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்து முதலமைச்சர் ஹிமந்தா தலைமையிலான அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்ஸோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அரசு சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த புதிய உத்தரவின் பேரில் அசாம் காவல் துறை மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 18 குறைவான பெண்களை திருமணம் செய்தவர்கள் மீது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 24 மணிநேரத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணம் நடத்தி வைத்த புரோஹிதர், இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 52 பேரும் இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 2,044 பேர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகியவை போடப்பட்டுள்ளன.

கடந்த இரு மாதங்களாக அனைத்து தரவுகளையும் திரட்டி அதன் அடிப்படையில் உள்ள முகாந்திரத்தின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதேவேளை, வன்முறை போராட்டத்திற்கு அரசு ஒரு போதும் இடம் தராது என அசாம் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், சுமார் 8,000 பேரின் பட்டியல் தங்களிடம் உள்ளதாக கூறியுள்ள காவல்துறை அனைவரின் மீது கைது நடவடிக்கை பாயும். இதில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.  தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் தரவுகளின் படி அசாமில் 20-24 கொண்ட பெண்களில் 32 சதவீதம் பேருக்கு 18 வயதுக்கு குறைவாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் 12 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே கருத்தரிப்புக்கு ஆளாகிறார்கள் என சர்வே புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

First published:

Tags: Assam, Child marriage