முகப்பு /செய்தி /இந்தியா / குழந்தை திருமணம்: 2 நாட்களில் 2,000 பேர் கைது... அசாம் அரசு அதிரடி!

குழந்தை திருமணம்: 2 நாட்களில் 2,000 பேர் கைது... அசாம் அரசு அதிரடி!

அசாம் குழந்தை திருமணம் விவகாரம்

அசாம் குழந்தை திருமணம் விவகாரம்

அசாமில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Assam, India

அசாமில் குழந்தை திருமணம் செய்ததாக 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசாமில் குழந்தை திருமணம் செய்து கொண்ட 2 ஆயிரத்து 258 பேர் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை திருமணம் தொடர்பாக 4 ஆயிரத்து 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடையவர்களை அசாம் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருமணம் செய்து வைத்த மத குருமார்கள் 51 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்வதவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமின் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர். எனினும், அடுத்த 6 நாட்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும், 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்படுவர் எனவும் அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Arrest, Assam government, Child marriage