நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய குடியுரிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அதில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022 ஆண்டில் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதன்படி, 2022இல் மட்டும் 2,25,620 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை வேண்டாம் என்று துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை கடப்பது இதுவே முதல்முறை. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்திய குடியுரிமையை வேண்டாம் எனத் துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
ஆண்டு வாரியாக பார்க்கையில் 2011ஆம் ஆண்டில் 1,22,819 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்த நிலையில், 2015 இல் 1,31,489 பேரும்; 2016இல் 1,41,603 பேரும்; 2017இல் 1,33,049 பேரும்; 2018 இல் 1,34,561 பேரும்; 2019 இல் 1,44,017 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர்.
கோவிட் லாக்டவுன் காலமான 2020 இல் ஒரு லட்சத்துக்கும் குறைவாக 85,256 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். பின்னர் அடுத்தாண்டான 2021 இல் 1,63,370 பேர் இந்திய குடியுரிமை துறந்து வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிப்பு... அதன் பயன்பாடுகள் என்ன?
2011ஆம் ஆண்டு தொடங்கி 2022 காலகட்டமான 11 ஆண்டுகளில் மொத்தம் 1,60,63, 440 பேர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். சமீப காலமாகவே இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பல இந்தியர்கள் அமெரிக்காவின் எச்1பி விசாக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் இந்த எண்ணிக்கை வருகாலத்தில் தொடர்ந்து உயரும் எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: External Minister jaishankar, Parliament Session, Passport