முகப்பு /செய்தி /இந்தியா / 11 ஆண்டுகளில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேற்றம் - மத்திய அரசு தகவல்

11 ஆண்டுகளில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேற்றம் - மத்திய அரசு தகவல்

இந்திய குடியுரிமை துறப்பு

இந்திய குடியுரிமை துறப்பு

2022 ஆண்டில் அக்டோபர் மாதம் வரையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,83,741 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியர்கள் பலர் தங்கள் குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறும் எண்ணிக்கை சில ஆண்டுகளாகவே கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான புள்ளி விவரத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் இந்திய குடியுரிமை துறப்பு குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை வேண்டாம் எனத் துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அமைச்சரின் புள்ளி விவரப்படி, 2011ஆம் ஆண்டு தொடங்கி கடந்த அக்டோபர் மாத இறுதி வரை 16 லட்சத்து 21 ஆயிரத்து 561 பேர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

ஆண்டு வாரியாக பார்க்கையில் 2011ஆம் ஆண்டில் 1,22,819 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்த நிலையில், 2015 இல் 1,31,489 பேரும்; 2016இல் 1,41,603 பேரும்; 2017இல் 1,33,049 பேரும்; 2018 இல் 1,34,561 பேரும்; 2019 இல் 1,44,017 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர்.

கோவிட் லாக்டவுன் காலமான 2020 இல் ஒரு லட்சத்துக்கும் குறைவாக 85,256 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.பின்னர் அடுத்தாண்டான 2021 இல் 1,63,370 பேர் இந்திய குடியுரிமை துறந்து வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். நடப்பு 2022 ஆண்டில் அக்டோபர் மாதம் வரையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,83,741 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.

இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை செய்து மரணம் - வேளாண் அமைச்சர் தகவல்

அதேவேளை, பாகிஸ்தான், வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பலர் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டில் 42 வெளிநாட்டினர் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். இந்தாண்டில் அக்டோபர் மாதம் வரை 60 வெளிநாட்டினர் இந்தியா குடியுரிமை பெற்று இந்தியாவில் குடியேறியுள்ளனர்.

First published:

Tags: Parliament