கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நான நிகழ்வில் பரிமாறிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்ட மாவட்டத்தில் மலப்பள்ளி பகுதியில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஞானஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 190 பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.ஞானஸ்நான நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒரு கேட்ரிங் நிறுவனம் மூலம் வந்திருந்தவர்களுக்கு உணவு பறிமாறியுள்ளனர்.விருந்தில் சாப்பிட்டு சென்ற பலருக்கும் அடுத்த நாள் வரிசையாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, வயிற்று போக்கு போன்ற கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது நிகழ்ச்சியை நடத்திவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழாவில் சாப்பிட்ட உணவு தான் பிரச்சனைக்கு காரணம் என்று உறுதியானது.சம்பந்தப்பட்ட கேட்ரிங் நிறுவனம் தரமற்ற உணவை வழங்கியிருக்க கூடும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சந்தேகம் கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கேட்ரிங் நிறுவனத்தின் மீது அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பப்ளிசிட்டிக்காக உயிர்பலியா? கட்சி கூட்டத்தில் நசுங்கி பலியாகும் மக்கள் - ஆந்திராவில் அடித்துக்கொள்ளும் கட்சிகள்!
சம்பவ நடந்த தினதில் மேலும் இரு இடங்களில் உணவு விநியோகம் செய்ததாக கேட்ரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கெல்லாம் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என அந்த கேட்டரிங் நிறுவனம் இது தொடர்பாக விளக்கத்தை கூறியுள்ளது. தனது 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு ஆளானதால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்யக் கூறி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food poison, Kerala