• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ 1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தாரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ரூ 1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தாரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

வட்டாட்சியர் நாகராஜ்

வட்டாட்சியர் நாகராஜ்

தெலங்கானாவில் ரூ. 1.10 கோடி லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்துள்ளது.

  • Share this:
    தெலங்கானா அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

    Also read: கோவில்களில் செய்ய வேண்டியது என்ன? - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

    நேற்று மாலை நாகராஜூ தன்னுடைய வீட்டில் அவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக மடக்கிப்பிடித்து அவரை கைது செய்தனர். அவருடைய வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது. இதற்கு முன்னரும் கூட லஞ்சம் வாங்கிய வழக்கில் நாகராஜை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: