முகப்பு /செய்தி /இந்தியா / “இந்தியாவின் வளர்ச்சி மீது நம்பிக்கை கூடியுள்ளது”... பிரதமரை சந்தித்த பில்கேட்ஸ் கருத்து..!

“இந்தியாவின் வளர்ச்சி மீது நம்பிக்கை கூடியுள்ளது”... பிரதமரை சந்தித்த பில்கேட்ஸ் கருத்து..!

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் பில்கேட்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் என்ற முன்னணி நிறுவனத்தை நிறுவியவர். 67 வயதான பில்கேட்ஸ் பல ஆண்டுகள் உலகின் டாப் பணக்காரராக இருந்த நிலையில், சமீப காலமாக தொழிலில் ஈடுபாடை குறைத்து கொண்டு தொண்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கேட்ஸ் பவுன்டேஷன் என்ற தொண்டு அமைப்பை தொடங்கி நடத்தி வரும் பில்கேட்ஸ், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்து முன்னணி பிரமுகர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை  நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன்... பழ.நெடுமாறன் விளக்கம்..!

அவர் தனது பதிவில் "இந்த வாரம் நான் இந்தியாவில் இருந்தேன், இங்கு சுகாதாரம், பருவநிலை மாற்றம் பிற முக்கியமான பகுதிகளில் நடக்கும் புதுமையான பணிகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உலகம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா போன்ற ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான நாட்டைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.

குறிப்பாக கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவது, இந்தியாவின் சுகாதார அமைப்புகளில் முதலீடு செய்வது குறித்து நாங்கள் உரையாடினோம். கேட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் பல பாதுகாப்பான, பயனுள்ள, மலிவு விலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா அற்புதமான திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுநோய் பரவலின் போது கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதுடன் உலகம் முழுவதும் உள்ள பிற நோய்களைத் தடுக்கின்றன.

பிரதமர் உடனான எனது உரையாடல், சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட நம்பிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது. நாம் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதை நாடு காட்டுகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடருவதுடன் அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று பிரதமருடான சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Bill Gates, PM Modi