Home /News /national /

உக்ரைனின் கோரிக்கையை ஏற்று மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கிறது இந்தியா... நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல்

உக்ரைனின் கோரிக்கையை ஏற்று மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கிறது இந்தியா... நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல்

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

EAM Jaishankar | உணவு பாதுகாப்புக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. பல நாடுகளுக்கு நாம் கோதுமை மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

    மருந்துப் பொருட்களை வழங்கி உதவுமாறு இந்தியாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்ததாகவும் இதனை ஏற்று அந்நாட்டிற்கு விரைவில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

    மனித நேய அடிப்படையில் உக்ரைனுக்கு இந்தியா 90 டன் அளவுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக உக்ரைன் துணை பிரதமர் யுலியா சிரிடென்கோ என்னை தொலைபேசியில் அழைத்து, கூடுதலாக மருந்து பொருட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் மருந்து பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதையும் படிங்க - இந்தியா மீது சீனாவின் Cyber Attack... மின் விநியோக தகவல்களை திருட சீன ஹேக்கர்கள் முயற்சி..

    இந்தியா எப்போதும் சர்வதேச நாடுகளின் நலனுக்காக செயல்படுகிறது. தனது நட்பு நாடுகள் பொருளாதார மற்றும் பல்வேறு சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு இந்தியா உதவுகிறது.

    இதனால் இந்திய பொருளாதாரத்திற்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் நம்முடைய நட்பு நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் போது நாம் உதவி செய்கிறோம். அந்த வகையில் இலங்கைக்கு கடன் அடிப்படையில் உணவு மற்றும் எரி பொருட்களை வழங்கியுள்ளோம்.

    இதையும் படிங்க - அல்கொய்தா எங்களை பற்றி பேச தேவையில்லை... மாணவி முஸ்கானின் தந்தை காட்டமான பதில்

    உணவு பாதுகாப்புக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. பல நாடுகளுக்கு நாம் கோதுமை மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

    உலக நாடுகள் பெருந்தொற்றை எதிர்கொள்வதிலும் இந்தியா முக்கிய பங்கை வகித்தது. உலக நாடுகளுக்கு நாம் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருக்கிறோம். உலக நாடுகள் தங்களுக்கு பாதிப்பு மற்றும் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன.

    இந்தியாவின் உதவிகள் எதிர்காலத்தில் தொடரும். இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி