துரியோதனன், துச்சாதனனை விட மோசமானவர்கள்: பாஜக குறித்து மம்தா விமர்சனம்!

முதல்வர் மம்தா பானர்ஜி

இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஒரு மாதத்துக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 

 • Share this:
  மேற்கு வங்க இடைத் தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரச்சாரம் ஒன்றில் பேசிய அவர், பாஜகவினர் துரியோதனன், துச்சாதனனை விட மோசமானவர்கள் என்று விமர்சித்துள்ளார்.

  மேற்கு வங்க மாநிலத்துக்கு   27 மார்ச் 2021 முதல் 28 ஏப்ரல் 2021 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது. அதேவேளையில், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்,

  இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்குப் பதிவுக்கு ஒரு மாதத்துக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

  மேலும் படிக்க: பெண்கள் முன்னேற்றத்தில் அடுத்த மைல் கல்: என்.டி.ஏ.வில் பெண்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு!


  திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி,  ‘நாம் போட்டியிட்டு வெல்ல வேண்டும். நாம் எலிகள் அல்ல புலிகள்’ என்று உற்சாகம் ஊட்டினார். மேலும், ’துரியோதனன், துச்சாதனன் ஆகியோரை விட அவர்கள்(பாஜக) மோசமானவர்கள்.  அவர்களின் சதி காரணமாக நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிட வேண்டியிருந்தது. தற்போது எனது  தொகுதியான பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவதால் மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

  இதையும் படிங்க: மகனாக மதிக்கிறேன்- இருந்தாலும் மன்னிக்க முடியாது: தந்தை கைது குறித்து சத்தீஸ்கர் முதல்வர்!


  இந்த முறை தேர்தலில் தான் நிச்சயம் வெல்வேன் என்று மம்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில், சதி உள்ளதால் மக்கள்  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்க் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே, இரண்டு முறை பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: