கொரோனா பாதிப்புகளுக்கு இடையே கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

கோப்புப் படம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  கொரோனா பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டத் தொடர் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டத்தில் இதற்கான பரிந்துரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர், வார விடுமுறையின்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க...திட்டமிட்டபடி நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

  சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, நாற்காலிகள் வரிசைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: