• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்த ஆண்டும் மழைக்கு வாய்ப்பு இல்லை?

இந்த ஆண்டும் மழைக்கு வாய்ப்பு இல்லை?

மழை (கோப்புப் படம்)

மழை (கோப்புப் படம்)

இந்தாண்டு மழைப்பொழிவு குறைவதற்கான முக்கியக் காரணமே எல் நினோ என்னும் பருவநிலை மாற்றம் தான்

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தாண்டு பருவமழை சராசரியை விடவும் குறைந்து தான் காணப்படும் என ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்கைமெட் என்னும் தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் இந்தாண்டு சரிசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு இருக்கும். குறிப்பாக பருவமழைக் காலமான ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் பெரும் மழை இருக்காது. குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு இந்தியா மழைக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு மழைப்பொழிவு குறைவதற்கான முக்கியக் காரணமே எல் நினோ என்னும் பருவநிலை மாற்றம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிப்பு ஆகிய இடர்களைச் சந்திக்கும் சூழல் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை குறித்த அறிவிப்பை இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனக் கூறப்பட்டுள்ளது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.











மேலும் பார்க்க: இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: