ஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

யமுனா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!
யமுனை ஆற்றில் வெள்ளம்
  • News18
  • Last Updated: August 21, 2019, 9:14 AM IST
  • Share this:
கனமழையால் யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் டெல்லி, ஹரியானா மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக யமுனா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. ஹரியானாவின் ஹன்தினிகுண்ட் நீர் தேக்கத்தில் இருந்து நேற்று பிற்பகலில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

நேற்றிரவு 9 மணி நிலவரப்படி 206 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதாகவும், இன்று காலைக்குள் 207 மீட்டர் அளவுக்கு தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக டெல்லி, ஹரியானா மாநிலங்களில் யமுனா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... மழை நீரை எவ்வாறு சேமிப்பது
First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading