முகப்பு /செய்தி /இந்தியா / 10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவிய மங்கிபாக்ஸ் வைரஸ் - உஷார் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா

10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவிய மங்கிபாக்ஸ் வைரஸ் - உஷார் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த 10 நாட்களில் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் சிக்கி தவித்து வந்த நிலையில், புதிதாக கிளம்பியுள்ள மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று நோய் அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் இந்த புதிய தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த துரித முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களில் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை இந்த தொற்று பாலியல் உறவுகளிலும்  குறிப்பாக ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்ளும் நபர்களிடம் அதிகம் காணப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெருந்தொற்று நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு உஷார் நிலை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றை தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மங்கிபாக்ஸ் பாதிப்பு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது .வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை முறையாக கண்கணிக்க மத்திய அரசு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. பொதுவாக வெளிநாட்டு பணிகள் போக்குவரத்து அதிகம் காணப்படும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கூடுதல் உஷார் நிலையில் உள்ளன. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் உரிய கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மகாராஷ்டிரா அரசும் காண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலையை குறைத்த இந்திய அரசுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் பாராட்டு - ஏன் தெரியுமா?

1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

First published:

Tags: Monkey B Virus, WHO