மங்கிபாக்ஸ் தொற்று குழந்தைகளுக்கு பரவும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தாக மாறிவிடலாம் என எம்ய்ஸ் கல்வி நிறுவன பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் மங்கிபாக்ஸ் தொற்று பரவியுள்ளது. இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் மங்கிபாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்தியாவில் முதல் மங்கிபாக்ஸ் தொற்று கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு உரிய மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரின் வீட்டார், உறவினர் என நேரடி தொடர்பில் இருந்த நபர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய சுகாதாரத்துறையும் தனது நிபுணர் குழுவை கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளது.
இந்நிலையில், மங்கிபாக்ஸ் தொற்று குறித்து எம்ய்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் கூறியதாவது, 'இந்த தொற்று நோய் தொடக்கத்தில் காய்ச்சல் ஏற்பட்டு, சுமார் ஐந்தாவது நாளில் உடலில் கட்டிகள், ரேஷஷ்கள் ஏற்படும். கண்களில் இந்த ரேஷஷ் ஏற்பட்டால் அது பார்வையை பறித்து விடும் அபாயம் கூட ஏற்படலாம்.இந்த மங்கிபாக்ஸ் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு மூலமாக பரவும். விலங்களுடன் முகத்தோடு முகத் தொடர்பு நீண்ட நேரம் இருந்தால் இந்த தொற்று பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம். இந்த தொற்று கோவிட் போல அதிக அளவில் பரவாது என்பதால் கவலைப்படத் தேவையில்லை. அதே வேளை, குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாகக் கூட அமைந்து விடும்' என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளே காலை 7 மணிக்கு ஸ்கூல் செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது - உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி
முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ள கேரள மாநிலத்தில் அம்மாநில சுகாதாரத்துறை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளன துபாய் பயணியுடன் வந்த 164 சக பயணிகளும் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIIMS, Children, Kids Health, Monkeypox