Home /News /national /

3வது மாடியில் இருந்து 4 மாத குழந்தையை தூக்கி வீசிய குரங்கு.. பெயர்சூட்டு விழாவுக்கு தயாராகியபோது நேர்ந்த துயரம்..

3வது மாடியில் இருந்து 4 மாத குழந்தையை தூக்கி வீசிய குரங்கு.. பெயர்சூட்டு விழாவுக்கு தயாராகியபோது நேர்ந்த துயரம்..

குழந்தையை தூக்கி வீசி கொன்ற குரங்கு

குழந்தையை தூக்கி வீசி கொன்ற குரங்கு

Monkey Throws Baby : குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு குடும்பம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் அக்குழந்தை குரங்கால் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

    நான்கு மாத குழந்தை ஒன்று குரங்கால் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள துங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்தேஷ் உபாத்யாய். இவருக்கு அன்மையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

    இந்த குழந்தை பிறந்து நான்கே மாதம் ஆன நிலையில், நேற்று தனது வீட்டின் மூன்றாம் மாடியில் குழந்தையை தூங்க வைத்து கொண்டிருந்தார். வெயில் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்ததால் குழந்தை நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காகவே இவர் குழந்தையை மூன்றாம் மாடிக்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில், திடீரென்று பல குரங்குகள் இவர்கள் இருந்த இடத்திற்குள் நுழைந்து சூழ்ந்து கொண்டுள்ளன. பதறிப்போன தந்தை நிர்தேஷ் கத்தி குரல் கொடுத்து தனது குடும்பத்தினரை அழைத்துள்ளார். குரல் கேட்டு இவர்களை காப்பற்ற உறவினர்கள் செல்வதற்குள், நிர்தேஷ் கையில் இருந்த குழந்தையை குரங்குகள் பறித்துக்கொண்டுள்ளன. சுதாரித்து குழந்தையை மீட்பதற்குள் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியுள்ளன. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    குழந்தைக்கு இன்னும் பெயர் கூட வைக்கப்படவில்லை. பெயர் வைக்கும் விழாவிற்கு குடும்பம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பரேலி பகுதியின் தலைமை வன அலுவலர் லலித் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தொலைக்காட்சி தொடரால் விபரீதம்: 7 வயது சிறுவன் கடத்தி கொலை.. 5 சிறுவர்கள் கைது!

    பரேலி பகுதியில் குரங்குகள் மற்றும் தெரு நாய்களின் அட்டகாசம் பெருமளவில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். குரங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி நாள்தோறும் பலர் அபாயத்தை சந்திப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நான்கு நாள்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் 80 வயது மூதாட்டியை அவர் வளர்க்கும் பிட்புல் ரக நாய் கடித்து குதறியுள்ளது. இதில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Monkey, Uttar pradesh

    அடுத்த செய்தி