பட்ஜெட் நாளில் அதிக வாசகர்களால் பார்க்கப்பட்ட மணி கண்ட்ரோல் இணையதளம்

மாதிரிப் படம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த அன்று டிஜிட்டல் தளங்களில் மணி கண்ட்ரோல்(Moneycontrol) இணையதளம் அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

 • Share this:
  நிதி, வர்த்தகம், வணிகம் உள்ளிட்ட துறைகள் குறித்து செய்திகளைப் பிரதானமாக கொண்டிருக்கும் இணையதளம் மணி கண்ட்ரோல். நிதி, வணிகம் தொர்பான செய்திகளை அறிந்துகொள்வதற்கு மணி கண்ட்ரோல் இணையதளத்தை நாடும் பார்வையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்தநிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினமான பிப்ரவரி 1-ம் தேதி இந்திய அளவில் டிஜிட்டல் தளங்களில் மணி கண்ட்ரோல் தளத்தை அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

  இதுதொடர்பாக மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘சிமிலர் வெப் இணையதளத் தரவுகளின்படி, பட்ஜெட் தினத்தன்று போட்டியாளர்களான எக்கனாமிக்ஸ் டைம்ஸைவிட 21 சதவீத பார்வையாளர்களும், லிவ்மிண்ட்டை விட 77 சதவீத பார்வையாளர்களையும், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸைவிட 108 சதவீத பார்வையாளர்களையும் மணி கண்ட்ரோல் கூடுதலாக பெற்றுள்ளது. சகபோட்டியாளர்களைவிட கூடுதல் ஸ்பான்சர்களையும் பெற்றுள்ளது.

  அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றது, செய்திகளை உடனடியாக உண்மைத் தன்மையுடன் பதிவிடுவதை உறுதி செய்வதாக உள்ளது. பட்ஜெட் 2021 தொடர்பாக ஆழமான பார்வைகளைக் கொடுக்கக் கூடிய செய்திகளைத் கொடுத்ததும் பார்வையாளர்களின் இந்த ஆதரவுக்கு காரணம். மணி கண்ட்ரோல் செய்தியின் மூத்த செய்தி ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்களுடன் இணைந்து நம்முடைய வாசகர்களுக்கு பட்ஜெட் குறித்த விரிவான பார்வைகளைக் கொடுத்தார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: