சபரிமலை பக்தர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக பணமோசடி

சபரிமலை பக்தர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக பணமோசடி

சபரிமலை மாதிரிப் படம்

நிலக்கல் அடுத்த கோட்டயம் பகுதியில் உள்ள, தனியார் மருத்துவ சோதனை மையம் ஒன்று கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியது.

 • Share this:
  சபரிமலை நிலக்கல் பகுதியில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாகக் கூறி, பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

  மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் காட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலக்கல் அடுத்த கோட்டயம் பகுதியில் உள்ள, தனியார் மருத்துவ சோதனை மையம் ஒன்று கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியது.

  இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், பரிசோதனைக்காக 2 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளனர். ஆனால், பணம் பெற்றுக் கொண்டு சான்றிதழை வழங்காமல், அந்த சோதனை மைய ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

  இது தெரியவந்ததும் அதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் நிலக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவ பரிசோதனை மைய ஊழியர்கள் சச்சின், அனந்து, அருண் ராஜ் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: