முகப்பு /செய்தி /இந்தியா / அர்பன் நக்ஸல்கள் நாட்டை அவமானப்படுத்துகிறார்கள்: மோகன் பகவத்

அர்பன் நக்ஸல்கள் நாட்டை அவமானப்படுத்துகிறார்கள்: மோகன் பகவத்

மோகன் பகவத்

மோகன் பகவத்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ராமர் கோயில் கட்டுவது, சபரிமலை செல்வது குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக், மற்றும் அர்பன் நக்சல் போன்ற பல நிகழ்வுகள் குறித்து பேசினார். மோகன் பகவத் பேசியதாவது:

ராமர் கோயில்

ராமர் கோயிலை சுயமதிப்பு கண்ணோட்டத்தில் கட்ட வேண்டும். அதுதான் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லுறவுக்கும் வழிவகுக்கும். ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டும் முயற்சியில் இந்தியர்களின் உணர்வுகள் ஒற்றுமையுடன் உள்ளது என்று கூறினார்.

சபரிமலை தீர்ப்பு

சபரிமலை

பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் பெரும்பான்மையான பெண்கள் எவரும் உச்சநீதி மன்ற தீர்ப்பை பொருட்படுத்தவில்லை. மாறாக இந்த தீர்ப்பு அமைதியின்மைக்கும் சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கும் இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது என்றார். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் அமைதியின்மையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றார். மேலும், பல ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஒரு செயலை பெரும்பான்மையான மக்களும் பின்பற்றி வரும் நடைமுறையை ஒரு தீர்ப்பு மாற்றுவது சரியானதல்ல என்றும் பேசினார்.

அர்பன் நக்சல்

அர்பன் நக்சல்கள் எனச் சொல்லப்படும் புதிய இடதுசாரி கொள்கைகள் கொண்டோர், தேசத்துக்கு எதிரான தலைமையை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்பவர்கள்தான் அந்த அமைப்பில் உள்ளனர். அர்பன் மாவோயிஸம் பொய்களை பரப்பி, சமூகத்தில் வெறுப்புணர்ச்சியை வளர்க்கிறது என்றார்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினரை தங்களின் திட்டங்களுக்கு நிறைவேற்ற மாவோயிஸம் பயன்படுத்திக் கொள்கிறது. நாட்டின் எதிரிகளிடம் இருந்து வலிமையைப்பெற்று, எங்குச் சென்றாலும் நாட்டை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த அர்பன் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் இந்த அர்பன் மாவோயிஸ்ட்களின் பெரும்படை அதிகளவில் ஏற்கனவே ஊடுருவிட்டது, அறிவுஜீவிகள், பல்வேறு உயர்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் சூழலை அர்பன் நக்சல்கள் செய்து வருகிறார். இவர்கள் மீது அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் பேசினார்.

First published:

Tags: Bhagwat, Dussehra Mohan Bhagwat Nagpur, Mohan Bhagwat, Urban naxal