கேரள வெள்ளம்: ஒரே நேரத்தில் 43 மாடுகளை இழந்து தவிக்கும் விவசாயி

கேரள வெள்ளம்: ஒரே நேரத்தில் 43 மாடுகளை இழந்து தவிக்கும் விவசாயி
மாடுகளை இழந்து வாடும் விவசாயி
  • News18
  • Last Updated: August 22, 2018, 11:17 AM IST
  • Share this:
கேரளாவில் ஆசை ஆசையாய் வளர்த்த 43 மாடுகளை வெள்ளத்தில் இழந்து தவிக்கிறார் விவசாயி முகமது ரபீக்.

எர்ணாகுளம் மாவட்டம் பானாய்குளம் கிராமத்தை சேர்ந்த முகமது ரபீக் என்ற விவசாயி, ஆசை ஆசையாய் வளர்த்த 43 பசுக்கள், 29 கன்றுக்குட்டிகள் மற்றும் 10 ஆடுகளை வெள்ளத்தில் இழந்து நிலைகுலைந்து காணப்படுகிறார்.

கடந்த 17ஆம் தேதி பானாய்குளம் கிராமத்தில் வெள்ளநீர் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதும், தனது பண்ணையில் இருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்துள்ளார் முகமது ரபீக். அந்த இடத்திலும் வெள்ள நீர் சூழ, இனி என்ன செய்வதன்று தெரியாமல் உயரமான கிடங்கிற்கு மாடுகளை ஏற்றி அடைத்திருக்கிறார். மறுநாள் காலையில் மாடுகளுக்கு தீவனம் கொண்டு வந்தபோது வெள்ளத்தில் மூழ்கி 5 மாடுகள் இறந்து மிதந்துள்ளதை கண்டு நிலை குலைந்து போனார் முகமது ரபீக்.


வெள்ள நீரில் எஞ்சிய மாடுகள் கழுத்தை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து மனமுடைந்த ரபீக், ஏதாவது ஒரு இடத்தில் இனி மாடுகள் பிழைத்துக் கொள்ளட்டும் என கயிற்றை கழற்றி விட்டுள்ளார். ஆனால், தன் கண் முன்னே 43 மாடுகள் வெள்ளத்தில் இறந்து மிதந்து சென்ற காட்சி மீளாத துயரம் என்கிறார் முகமது ரபீக்.

வங்கிகளில் கடன் வாங்கி தமிழகத்தின் ஈரோடு, பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் உயிரிழந்ததால் 34 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மாடுகளுக்கு வாங்கி வைத்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீவன மூட்டைகள் வீணாகி இருப்பதாகவும் முகமது ரபீக் கூறியுள்ளார். எஞ்சியுள்ள எட்டு மாடுகளையும், 3 கன்றுக் குட்டிகளையும் வைத்து தனது வாழ்க்கையை மீண்டும் துவங்க உள்ளதாக நம்பிக்கையுடன் கூறும் முகமது ரபீக், தனது வாழ்வியல் மேம்பாட்டுக்கு இந்த மாடுகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார் தழுதழுத்த குரலில்.
First published: August 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading