மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி, நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளநிலையில் இன்று அந்தத் தொகுதியில் சாலை வழியாக பேரணியாகச் சென்றார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவுள்ளார். அதற்காக, நாளை அவர் அவரது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளநிலையில், இன்று வாரணாசியில் சாலை வழியாக திறந்த வாகனத்தில் மோடி பேரணியில் ஈடுபட்டார்.
அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர். வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதி முகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.