Home /News /national /

‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

Punjab Deputy CM OP Soni

Punjab Deputy CM OP Soni

‘மோடி வாழ்க’ என ஓ.பி.சோனி கோஷமிட்ட பின்னரே அவரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல பாஜகவினர் அனுமதித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதை அறிந்த பாஜகவினர், பஞ்சாப் துணை முதல்வர் ஓ.பி.சோனியை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்திய நிலையில் ‘மோடி வாழ்க’ என கோஷமிட்ட பின்னரே அங்கிருந்து அவரால் செல்ல முடிந்தது.

    கடந்த ஜனவரி 5ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதற்காக சென்ற பிரதமர், பதிண்டாவில் இருந்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு செல்லும் வழியில் விவசாயிகள் திரண்டு திடீரென போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்குள்ள பாலத்தின் மீது பிரதமரின் கான்வாய் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கக் கூடிய நாட்டின் உச்சபட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கக் கூடிய பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.



    மேலும் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட காரணமாக இருந்ததாக பஞ்சாப் மாநில அரசு மீது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக தகவல்கள் வெளியான பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்த பஞ்சாப் துணை முதல்வர் ஓ.பி.சோனியின் கான்வாயை பெரோஸ்பூரில் நேற்று தடுத்து நிறுத்திய பாஜகவினர் பெருமளவில் திரண்டு, அவரின் வாகனத்தை மேற்கொண்டு நகரவிடாமல் முடக்கினர்.

    Also read:  பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    ஜெய் ஸ்ரீ ராம் என பாஜகவினர் கோஷமிட்டனர். பாஜகவினரை அப்புறப்படுத்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை, கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்ட போதும் பாஜகவினர் ஆவேசமாக கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக
    சுமார் 40 நிமிடங்கள் துணை முதல்வர் சோனி அங்கேயே முடக்கி வைக்கப்பட்டார். இதனையடுத்து காரின் கதவை திறந்து போராட்டக்காரர்களை பார்த்து கையை உயர்த்தி ‘மோடி வாழ்க’ என ஓ.பி.சோனி கோஷமிட்ட பின்னரே அவரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல பாஜகவினர் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Narendra Modi, Punjab

    அடுத்த செய்தி