74-வது மான் கி பாத் உரை: 11 மணிக்கு வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

74-வது மான் கி பாத் உரை: 11 மணிக்கு வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசவுள்ளார்.

 • Share this:
  கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

  இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று 11 மணிக்கு தொடங்க இருக்கிறது . அதில் வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி,இ ஒவ்வொரு முறை மான் கி பாத் நிகழ்ச்சிக்கும் பேச வேண்டிய தலைப்புகள் குறித்து மக்களை ட்விட்டரில் கருத்து தெரிவிக்கச் சொல்லி தெரிவிப்பார். அதுபோல, இந்தமுறையும் தெரிவித்துள்ளார். கடந்தமுறை மான்கி பாத் நிகழ்ச்சியில், கலை, கலாச்சாரம், சுற்றுலா, விவசாயத்துறை புதுமைப்படுத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார்.

  இன்றைய 74-வது மான்கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது. இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 74-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: