சீன அதிபர் தங்கல் படம் பார்த்ததாக கூறினார்! பிரச்சாரத்தில் மோடி கூறிய சுவாரஸ்யத் தகவல்
”பா.ஜ.கவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வரவில்லை. ஹரியானாவில் நான் வாக்கு கேட்கப்போவதில்லை. ஹரியானா, என்னை அழைத்தது.”

மோடி
- News18
- Last Updated: October 15, 2019, 4:35 PM IST
சீன அதிபர் ஷி ஜின்பிங், தங்கல் படம் பார்த்ததாக என்னிடம் கூறினார் என்று பிரதமர் மோடி ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பா.ஜ.கவக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி ஹரியானா மாநிலம் தாத்ரி தொகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘கடந்த 70 வருடங்களாக, இந்தியாவுக்கும், ஹரியானா மாநில விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது.
அதனை, தடுத்து உங்கள் வீட்டுக் கொண்டுவந்தது மோடிதான். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கு வரவில்லை. பா.ஜ.கவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வரவில்லை. ஹரியானாவில் நான் வாக்கு கேட்கப்போவதில்லை. ஹரியானா, என்னை அழைத்தது. இங்கு வருவதை என்னால் தடுக்க முடியாது. நீங்கள் எனக்கு அளவு கடந்த அன்பை கொடுத்துள்ளீர்கள். இந்த ஆண்டு நமக்கு இரண்டு தீபாவளி. ஒன்று தீப ஒளி தீபாவளி. மற்றொன்று தாமரை தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளியை மகள்களுக்கு நான் சமர்பிக்கிறேன். ஹரியானாவில் பா.ஜ.க மீண்டும் சேவை செய்வது உறுதியாகியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின் பிங்குடனா சந்திப்பின்போது, அவர் தங்கல் படம் பார்த்ததாக கூறினார்’ என்று தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் தாத்ரி சட்டமன்றத் தொகுதியில் பாபிதா போகாத், பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். பாபிதா போகாத், அவரது தந்தை, அவரது சகோதரி ஆகியோரது வாழ்க்கைதான் தங்கல் என்ற படமாக எடுக்கப்பட்டது. அவர் வாக்கு சேகரிக்கும்போது படத்தை குறிப்பிட்டு மோடி வாக்கு சேகரித்தார்.
Also see:
ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பா.ஜ.கவக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி ஹரியானா மாநிலம் தாத்ரி தொகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘கடந்த 70 வருடங்களாக, இந்தியாவுக்கும், ஹரியானா மாநில விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது.
அதனை, தடுத்து உங்கள் வீட்டுக் கொண்டுவந்தது மோடிதான். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கு வரவில்லை. பா.ஜ.கவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வரவில்லை. ஹரியானாவில் நான் வாக்கு கேட்கப்போவதில்லை. ஹரியானா, என்னை அழைத்தது. இங்கு வருவதை என்னால் தடுக்க முடியாது. நீங்கள் எனக்கு அளவு கடந்த அன்பை கொடுத்துள்ளீர்கள். இந்த ஆண்டு நமக்கு இரண்டு தீபாவளி. ஒன்று தீப ஒளி தீபாவளி. மற்றொன்று தாமரை தீபாவளி.