• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மோடி அலையால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது: எடியூரப்பா

மோடி அலையால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது: எடியூரப்பா

எடியூரப்பா

எடியூரப்பா

கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளை சொல்லி வெற்றி பெற்றோம். மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா பேசினார்.

  • Share this:
    கர்நாடக  மாநில சட்டப்பேரவை தேர்தலில்  மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    கர்நாடக பாஜக நிர்வாகிகள் கூட்டம் தேவனகிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,  வரவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மோடி அலை மட்டுமே உதவாது என்று குறிப்பிட்டார்.  மக்களவை தேர்தல் என்பது வேறு, சட்டப்பேரவை தேர்தல் என்பது வேறு. பாஜகவின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தேசிய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள்  இணைந்து பணியாற்றினால்தான் 140க்கு அதிகமான இடங்களை வெல்ல முடியும் என்றும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் உள்ளூர் தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், “ கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளை சொல்லி வெற்றி பெற்றோம். மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

    இதையும் படிங்க: கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்பம் சேர்ப்பு - மத்திய அரசுக்கு சிலம்பாட்ட வீரர்கள் நன்றி


    “தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும் . எளிதாக வெற்றி பெறலாம் என்று எண்ணக்கூடாது. எதிரணியினர் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அளித்து மீண்டும் நாம் ஆட்சிக்கு வரவேண்டும்” என்றும் நிர்வாகிகள் மத்தியில் எடியூரப்பா பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: