யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை சிசிடிவி மூலம் மோடி கண்காணிப்பார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு பிரசாரம்

"பாஜகவின் ஓட்டு குறையும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறையும்"

news18
Updated: April 16, 2019, 1:35 PM IST
யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை சிசிடிவி மூலம் மோடி கண்காணிப்பார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு பிரசாரம்
எம்.எல்.ஏ விஜய் மற்றும் பிரதமர் மோடி
news18
Updated: April 16, 2019, 1:35 PM IST
“நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா? என்பதை வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் மோடி கண்காணிப்பார்” என்று குஜராத் பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், தாஹூத் தொகுதியில் பிரசாரம் செய்த அம்மாநில பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, வில்லங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

“யாரெல்லாம் பாஜகவுக்கு வாக்களிக்கிறீர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க இம்முறை பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். டெல்லியில் இருந்து மோடி பார்ப்பார். பாஜகவின் ஓட்டு குறையும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறையும்” என்று ரமேஷ் கடாரா மக்களிடையே பேசினார்.

கடந்த 2014 தேர்தலின் போது குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also See..

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...