பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமரை சுற்றியுள்ள ஆமாம்சாமி கூட்டம்தான் - சுப்பிரமணியன் சுவாமி

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமரை சுற்றியுள்ள ஆமாம்சாமி கூட்டம்தான் - சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
  • Share this:
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமர் மோடியை சுற்றி இருக்கும் ஆமாம் சாமி கூட்டம் தான் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டின் ஜிடிபி 4.5 சதவீதமாக சரிந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமரை சுற்றியுள்ள ஆலோசகர்கள், அவரிடம் பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை கூறுவதற்கு அச்சப்படுவதாகவும், பிரதமரிடம் பொய்யான வளர்ச்சியை கூறி நம்பவைப்பதாகவும் சாடினார்.


மேலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கலாம் எனவும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
First published: December 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading