Home /News /national /

'விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது நரேந்திர மோடி'- நாக்குத் தவறிய சித்தராமையா

'விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது நரேந்திர மோடி'- நாக்குத் தவறிய சித்தராமையா

சித்தராமையா

சித்தராமையா

விவசாயச் சட்டங்களைத்தான் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார், விவசாயக் கடன்களை ரத்து செய்ததாக  கர்நாடகாவின்  முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர், சித்தராமையா வாய் தவறி ‘விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தது மோடி’ என்று பேசியது பரபரப்பாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    விவசாயச் சட்டங்களைத்தான் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார், விவசாயக் கடன்களை ரத்து செய்ததாக கர்நாடகாவின்  முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர், சித்தராமையா வாய் தவறி ‘விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தது மோடி’ என்று பேசியது பரபரப்பாகியுள்ளது.

    கர்நாடக மேல்-சபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பெலகாவியில் நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று வாய் தவறி கூறி விட்டார். தனது தவறை உடனே அறிந்து கொண்ட அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து சித்தராமையா பேசும்போது, “பாஜக இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. போராட்டம் நடத்திய விவசாயிகளில் 700 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் பற்றி பேச பாரதிய ஜனதா கட்சிக்குத் தகுதி இல்லை. நான் ஆட்சியில் இருந்தபோது இந்திரா உணவகம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். இதை இந்த பாரதிய ஜனதா அரசு நிறுத்திவிட்டது.

    கர்நாடகத்தில் பாஜக அரசுக்கு மக்கள் சாபம் விடுகிறார்கள். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். தேசபக்தி பற்றி பாஜகவினர் பாடம் நடத்துகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒருவராவது உயிர்த்தியாகம் செய்துள்ளார்களா?

    Also Read: நாகாலந்து துப்பாக்கிச் சூடு- மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
     தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான். பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ் மூலம் முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் அல்ல. அவர் குலுக்கல் மூலம் பதவிக்கு வந்துள்ளார். அவரை நீக்குவதாக அமைச்சர் ஈசுவரப்பா கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Karnataka, Siddaramaiah

    அடுத்த செய்தி