தாஜ்மஹாலுக்கு வருகை தரஉள்ள அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மோடி பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வரும் 24ம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியா வருகிறார். அஹமதாபாத்தில் மோட்டேரா மைதானத்தில் பிரமண்டமாய் நடைபெற உள்ள “நமஸ்தே ட்ரம்ப்“ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அதன்பின் மாலை 4.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட உள்ளார். டொனல்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் மறுமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தாஜ்மஹாலை சுமார் 30 நிமிடங்கள் பார்வையிட உள்ளனர்.
டிரம்புடன் ஆக்ராவுக்கு பிரதமர் மோடியும் வரக்கூடும் என்ற செய்திகள் குறித்து கேட்டபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரும் தாஜ்மஹாலின் வரலாற்று சின்னைத்தை பார்க்க தகுந்த முறையில் பார்வையிட வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இதற்கா இந்தியாவை சேர்ந்த மூத்த அதிகார்கள் யாரும் உடன் இருக்க எந்த திட்டமிடப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trump India Visit