அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 8 மாநில முதல்வர்களுடன் 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 8 மாநில முதல்வர்களுடன் 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் மகாராஷ்டிராவில் மட்டும் பாதிப்பு 57,000-த்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பு 29 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரையில் நாடு முழுவதும் 1,25,89,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகின்றன. இருப்பினும், மீண்டும் முழு ஊரடங்கு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில், வரும் ஏப்ரல் 8-ம் தேதி 8 மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் ஏற்படும் கொரோனா பாதிப்பின் 80 சதவீதம் இந்த மாநிலங்களில்தான் உள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: