கொரோனா யுத்தம்: ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள் - மோடி வேண்டுகோள்

கொரோனா யுத்தம்: ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள் - மோடி வேண்டுகோள்
மோடி
  • Share this:
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக மோடி நாடு மக்களுக்கு உரையாற்றினார். அதில், ‘மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்.
ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதியதற்கு நன்றி. முன்னெப்போதும் இல்லாத ஆதரவு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.


முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடு ஊரடங்கு காலத்தில் உள்ளது. நாம், எடுக்கும் நடவடிக்கைகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் இன்று ஊரடங்கின் 10 நாள்களை நிறைவு செய்துள்ளோம். வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம். ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் விளக்கை அணையுங்கள். அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும். வீட்டின் நான்கு மூலைகளிலும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விளக்குகளை ஏற்படுத்த வேண்டும். யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading